காலைக்கடனை ஒரு போதும் தள்ளிப் போடாதீர்கள்!
மனிதனுக்கு உணவு எவ்வளவு முக்கியமோ, உறக்கம் எவ்வளவு முக்கியமோ, அதே மாதிரி `காலைக்கடனை’ ஒழுங்காக முடிப்பதும் ரொம்ப ரொம்ப முக்கியம். ஒவ்வொரு வேளை சாப்பிடும் உணவும் முழுவதுமாக ஜீரணமாகி, மீதமுள்ள உபயோகமில்லாத கழிவுப் பொருள்கள், மறுநாள் காலையில் உடலை விட்டு வெளியே வந்தாக வேண்டும். உயிருள்ள ஜீவராசிகள் அனைத்துக்கும் இது இயற்கை. Read the rest of this entry »வளையோசை கிலுகிலுவென..
கைகளில் எத்தனை வளையல்கள் போட்டிருக்கிறீர்கள்? என்று கேட்க இப்போது பலரும் தயாரில்லை! என்ன டிசைன் வளையல் போட்டிருக்கிறாய்? என்றுதான் கேட்கிறார்கள். அதனால் செல்வச் செழிப்பை வளையல்களின் எண்ணிக்கை மூலம் காட்டுவது குறைந்து வருகிறது. புத்திசாலித்தனமான புதிய புதிய செலக்ஷன்தான், அவர்களைப் பற்றி மற்றவர்களை பேசவைக்கிறது. Read the rest of this entry »
அழகா உடை உடுத்துங்க!
மனிதர்களின் அழகையும், கம்பீரத்தையும் அதிகரித்துக் காட்டுபவை ஆடைகள். நமக்கு கூடுதல் அழகையும் தரும். என்ன மாதிரியான உடைகள் நமக்கு ஏற்றது என்று தெரியாமலேயே ஒரு சிலர் ஆடை அணிவார்கள்.
வீட்டில் அணிய வேண்டிய ஆடைகளை வெளியிலேயேயும், திருமணம் போன்ற பார்ட்டிகளுக்கு சாதரணமாகவும் உடுத்திச் செல்வார்கள். இது சரியானதல்ல. Read the rest of this entry »
கருணாநிதியின் 89வது பிறந்த நாள்: பிரம்மாண்டமாக கொண்டாட திமுக இளைஞர் அணி தீர்மானம்
தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நேற்று மாலை சென்னை, அன்பகத்தில் உள்ள அண்ணா மன்றத்தில், மாநில இளைஞர் அணி செயலாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. தி.மு.க தலைவர் கருணாநிதியின் 89வது பிறந்தநாளான வரும் ஜூன் 3ம் தேதியை, பிரமாண்டமாகக் கொண்டாட வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. Read the rest of this entry »
பெர்ஃப்யூமை தேர்ந்தேடுப்பது எப்படி?
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆடை மட்டுமல்ல. பெர்ஃப்யூமும் இதில் அடங்கும். ஒருவர் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவர் என்பதை அவர் பயன்படுத்தும் பெர்ஃப்யூமை வைத்துக் கண்டுபிடித்து விடலாம்.அதுமட்டுமல்ல… ஹாட்டான நம்ம ஊர் பருவநிலையில் நம் வியர்வை நாற்றம், உடனிருப்பவர்களுக்கு ஒருவித முகச்சுளிப்பை ஏற்படுத்தி விடும். அதனாலேயே பெர்ஃப்யூம்கள் பயன்படுத்துவதை நம்மால் தவிர்க்க முடிவதில்லை Read the rest of this entry »
வெளிநாட்டில் இருந்து மணமகன் வர தாமதம்: மணப்பெண்ணுக்கு, மணமகனின் சகோதரி தாலி கட்டினார்

கேரள மாநிலம் காயங்குளம் பகுதியை சேர்ந்த கமலேஷ், கடந்த 3 ஆண்டுகளாக துபாயில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார்.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த அவருக்கு சாரிகிரிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், திருமணத்திற்குச் செல்ல கமலேஷின் கடை உரிமையாளர் அவருக்கு விடுமுறை அளிக்க மறுத்துவிட்டார். Read the rest of this entry »
பெண் ஆணிடம் எதிர்பார்ப்பது என்ன?
பெண்கள் இப்படி நடக்க வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்ப்பது போல ஒவ்வொரு பெண்ணும், ஆணிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறாள். ஒவ்வொருவருக்கும் எதிர்பார்ப்புகள் வித்தியாசப்படும். ஆனால் அனைத்துப் பெண்களும் ஆண்களிடம் எதிர்பார்ப்பது அன்பும், பாசமும், நேசமும்தான். மகிழ்ச்சியான தருணத்தில் தலைகோதும் விரலும், சோக தருணத்தில் தலை சாய மடியும் தரும் ஆண் கிடைத்தால் ஒரு பெண் மகிழ்ச்சி அடைகிறாள். Read the rest of this entry »
ஜீரணம் ஆகாத உணவுப் பொருட்களை சாப்பிடாதீர்கள்
“ஒண்ணுமே சாப்பிடலை, ஆனால் வயிறு மட்டும் பெரிசா இருக்கு” என்பார்கள் சிலர். “வயிறு வீங்கியிருக்கு, வயிறு பானை மாதிரி இருக்கு” என்பார்கள் சிலர். “வயித்தில `கேஸ்’ நிறைய இருக்கு” என்பார்கள் சிலர். “ஒரே கேஸ் பிராப்ளம். வயிறு கல் மாதிரி இருக்கு. பசியே எடுக்கலை. சரியா சாப்பிட முடியலை” என்ற புலம்பல்கள் அடிக்கடி நம் காதில் விழும் வார்த்தைகளாகும். Read the rest of this entry »
பெண்களை அதிகம் தாக்கும் முதுகு வலி
உலகில் 80 சதவீதம் பேர், வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் கீழ் முதுகு வலியால் அவதிப்படுகிறோம். முதுகுத் தண்டு வடம், ஒன்றன் மீது ஒன்று அமைந்த வகையிலான சிறிய முள்ளெலும்புகளால் ஆனது. இந்த எலும்புகளுக்கிடையே உள்ள நீரும், வழுவழுப்பான சதையும், எலும்புகள் ஒன்றோடு ஒன்று தேயாமல் தடுக்கின்றன. இவை, முதுகு தண்டு வடத்துடன் ஒட்டிய சதை மற்றும் ஜவ்வுகளின் ஆதரவுடன் செயல்படுகின்றன. Read the rest of this entry »
அழகான உதடுகளுக்கு இயற்கை முறை ஆலோசனை
* முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை அழகு பெறும்.
* தினமும் நெய் அல்லது வெண்ணெயை உதடுகளில் தடவி வர, அவற்றில் உள்ள வெடிப்புகள் நீங்கி, உதடுகள் வழவழப்பாகும். Read the rest of this entry »

